கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED :2 days ago
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் குண்டம் தேர் திருவிழா கடந்த 17 ம் தேதி சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. வருகிற 31 ம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, கோவிலில் குண்டம் அமைக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது. விழாவில், முன்னதாக கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து குண்டம் அமைக்கும் இடத்தில் பூஜை நடத்தப்பட்டு, பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குண்டம் இரண்டு அடி ஆழத்தில், இரண்டு அடி அகலத்தில், 60 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.