மேல்பாதி வீரனார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :11 hours ago
சேத்தியாத்தோப்பு: வீரனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேத்தையொட்டி, நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தன. இதயைடுத்து காலை 9.30 மணிக்கு யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி 10.00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.