கல்பட்டு செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கல்பட்டு செல்வ விநாயகர், தண்டபாணி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி, பக்த ஆஞ்சநேயர், 27 அடி உயர வராஹி அம்மன், கால பைரவர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா பூர்ணாஹூதி நடந்தது. 23ம் தேதி காலை 9:00 மணிக்கு லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, கும்ப அலங்காரம், வாஸ்து சாந்தி மற்றும் மாலை 5:00 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், முதற்கால பூஜை நடந்தது. 24ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மூன்றாம் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை 8:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை, நாடிசந்தனம் மற்றும் காலை 10:00 மணிக்கு செல்வ விநாயகர், தண்டபாணி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி, பக்த ஆஞ்சநேயர், 27 அடி உயர வராஹி அம்மன், கால பைரவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.