உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதியுலா

நாக வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதியுலா

காஞ்சிபுரம்; ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் நேற்று நாக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், மார்ச்-22ல் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி, காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில், ஏகாம்பரநாதர் எழுந்தருளி வீதியுலா வந்தார். நான்காம் நாளான இன்று காலை நாக வாகனத்தில், ஏலவார் குழலி சமேத  ஏகாம்பரநாதர் எழுந்தருளினார். நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இரவு, வெள்ளி இடப வாகனத்தில், ஏலவார் குழலி சமேத  ஏகாம்பரநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !