கள்ளக்குறிச்சி பாலமுருகன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
ADDED :189 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்தரத்தையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்தரத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் பாலமுருகன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையில் இருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.