உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா: தங்க கருட சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா: தங்க கருட சேவை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


ஸ்ரீரங்கம் கோயிலில் ஆதி பிரம்மோத்ஸவம் எனும் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பங்குனி தேர்த் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று (மார்ச் 27) தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை மார்ச் 29-ஆம் தேதி நம்பெருமாள் உறையூர் கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஏப்ரல் 1-ஆம் தேதி பங்குனி உத்திர நாளில் நம்பெருமாள் ஸ்ரீரெங்கநாச்சியார் தாயாருடன் சேர்த்தி சேவையில் எழுந்தருளுகிறார். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !