அந்த 7 நபர்கள்
ADDED :181 days ago
மதியம் வெயிலில் வெற்று காலுடன் நடக்கிறீர்கள். நிழல் தரும் மரத்தைக் கண்டால் அதனடியில் ஒதுங்குவீர்கள் தானே... அது போல மறுமை நாளில் இறைவனின் இனிமையான நிழலில் ஒதுங்க
ஏழு பேருக்கு உரிமை உண்டு.
1. நீதி தவறாத தலைவர்.
2. தொழுகையில் ஈடுபடுபவர்.
3. பள்ளிவாசலுடன் தொடர்புள்ளவர்.
4. மார்க்க விஷயத்தில் ஒற்றுமை காப்பவர்.
5. அவனுக்காக தனிமையில் கண்ணீர் விடுபவர்.
6. அவனுக்கு பயந்து அழகிய பெண்களின் அழைப்பை ஏற்காதவர்.
7. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் தர்மம் செய்பவர்.