நெல்லிக்குப்பம் ருத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :179 days ago
நெல்லிக்குப்பம்: ருத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி வண்ணாரப்பேட்டை பிரக்ருதி ருத்ரகாளி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சக்தி கரகம் ஊர்வலம் நடந்து சாகை வார்த்தலும், இன்று மாலையில், வைடிபாக்கம் எல்லை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து ஏராளமான பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக ருத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.