உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலை கரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று  காலை  கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பகல் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. இரவில் புஷ்ப விமானம், நந்தி, கைலாசம், சேஷ, வெள்ளி, ரிஷப வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும்  29 அதிகாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மே, 1ல் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணிக்குள் திருத்தேர் நிலை வந்தடைகிறது. 2ல்  அய்யர்மலை திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4ல் இரவு சுவாமிக்கு மஞ்சள் நீர்   நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுடன்  விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, திருப்பூர் மண்டல இணை ஆணையர்  ஹர்ஷினி, கரூர் துணை ஆணையர் கூடுதல் பொறுப்பு விஜயலட்சுமி மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் தங்கராஜ், ஆய்வாளர் மாணிக்கசுந்தரம் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !