உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளழகராக வராகநதி கரையோரம் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

கள்ளழகராக வராகநதி கரையோரம் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

பெரியகுளம்:  பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கள்ளழகராக குதிரை வாகனத்தில் வராகநதி கரையோரம் எழுந்தருளினார்.‌ பச்சைப்பட்டு, கருப்பு திலகமிட்டு, கீழ வடகரை அழகர்சாமிபுரம் வராக நதிக்கரை ஓரத்தில் துவங்கினார். கோவிந்தா கோவிந்தா நாமம் ஒலிக்க வடகரை, தென்கரை 37 இடங்களில் கள்ளழகராக வீதி உலா வந்தார். அழகர் வேடம் அணிந்து பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி, பக்தர்களை குஷி படுத்தினர். பச்சைப்பட்டு கருப்பு திலகம், அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும். மழை பெய்ந்து விவசாயம் செழிக்கும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !