உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் இரு நாட்களில் 1.40 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

திருமலையில் இரு நாட்களில் 1.40 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

நகரி: பொங்கல் பண்டிகை ஒட்டி, மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால், திருமலை கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். விடுமுறை முடிந்தும், கூட்டம் குறையவில்லை. கடந்த இரு நாட்களில் மட்டும், 1.40 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.அதிகாலை மற்றும் இரவு நேர வி.ஐ.பி., தரிசனத்திலும், ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஏழு மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !