அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :1 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பெண்கள் கோயிலின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கோயிலில் ஏப்.29 இரவு 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும் விழாவில் நேற்று முன்தினம் அதிகாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலையில் கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று (மே 6) பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தேரோட்டம், பூ பல்லக்கு போன்றவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.