உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் இருந்து திருப்பதிக்கு 2 நாள் ஆன்மிக பயணம் மீண்டும் தொடங்கியது ஆந்திர அரசு

சென்னையில் இருந்து திருப்பதிக்கு 2 நாள் ஆன்மிக பயணம் மீண்டும் தொடங்கியது ஆந்திர அரசு

சென்னை: ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னையில் இருந்து திருமலை தரிசனத்திற்கான இரண்டு நாள் ஆன்மிக சுற்றுலா பயணத்தை, மீண்டும் தொடங்கியுள்ளது. திருமலை தரிசனத்திற் கான ஆன்மிக தொகுப்பு சுற்றுலா பயணத்தை, ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கி வந்தது. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற் பட்டு, திருமலை சிறப்பு தரிசன டிக்கெட் வழங் காததால், அச்சேவை நிறத்தப்பட்டது. இந்நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு, சர்வ தரிசன சேவைக் டிக்கெட் அதிக ரிக்கப்பட்டு, தினமும் இரண்டு முறை வழங்கப் கான படுகிறது. கருத்தில் இதை கொண்டு, சென்னையில் இருந்து திருமலை தரி சனத்திற்கான இரண்டு நாள் சுற்றுலா சேவையை, ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மீண் டும் தொடங்கியுள்ளது.


அதன்படி, ஒவ் வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை களில், சென்னை, கிண்டி மெட்ரோ, எச்.பி., பெட் ரோல் பங்கில் இருந்து தினமும் இரவு 10:30 மணி; கோயம்பேடு லான்சன் டொயோட்டா ஷோரூம் அருகில் இருந்து இரவு, 11:00 மணிக்கு சுற்றுலா புறப்படுகிறது. பேருந்து மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு சர்வதரிசனத் திற்கான டோக்கன் பெற அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து, காளஹஸ் தியில் உள்ள ஆந்திர சுற் றுலாத்துறை விடுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு சற்று நேர ஓய்விற்குப்பின், காலை திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தரிச னமும், மாலை 4:00 மணிக்கு ஸ்ரீனிவாச மங்காபுரம் பெருமாள் கோவில் தரிசனமும் செய்யலாம். மாலை 6:30 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தி கோவில் தரிசனம். இரவு விடுதி யில் தங்க வேண்டும். இரண்டாம் நாள் அதி காலை 5:00 மணிக்கு சென்று, காளஹஸ்தியில் இருந்து திருமலை சுவாமி தரிசனம் முடித்து சென்னை திரும்பலாம். இந்த பயணத்தில் தங்கும் விடுதி, வால்வோ பஸ், உள்ளூர் கைடு சேவை ஆகியவை கட்டணத்தில் அடங்கும். ஒரு நபருக்கு 2,000 ரூபாய் கட்டணம். மேலு தகவலுக்கு, 98405 80577 என்ற எண் ணிலும், www.aptdc.in என்ற இணையதள முக வரி அல்லது தமிழக சுற் றுலா வளர்ச்சிக் கழக வளா கம், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 2 என்ற -முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !