கருமாரியம்மன் கோவில் பூகுண்டம்; அம்மன் கரகம் சுமந்து இறங்கிய சிறுமி
ADDED :1 days ago
குன்னுார்: குன்னுார் வெலிங்டன், சின்ன வண்டிச்சோலை, தேவி கருமாரியம்மன் கோவிலில், 5 நாட்கள் நடந்த திருவிழா நிறைவு பெற்றது.
குன்னுார் வெலிங்டன், சின்ன வண்டிச்சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில், 122வது ஆண்டு திருவிழா கடந்த, 7ல், கொடியேற்றத்துடன் துவங்கி, தேர் பவனி, கரக ஊர்வலம், பூ குண்டம் திருவிழா நடந்தது. அதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூ குண்டம் இறங்கினர். உடுக்கை அடி பாடல்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, மஞ்சள் நீராடல், மறுபூஜை, புஷ்ப, ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர், ஊர் பொது மக்கள் செய்தனர்.