வில்லியனுார் பெருமாள் கோவில்களில் புண்ணிய கால வழிபாடு
புதுச்சேரி: பெருமாள் கோவில் களில் விஷ்ணுபதி புண்ணிய கால நிகழ்ச்சி நடந்தது.
வில்லியனுார் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாதம் 1ம் தேதியை முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாாக பெருமாளுக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. வைகாசி மாதம் காலத்தில் பெருமாளை தரிசிப்பதால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் மற்றும் சகல சவுபாக்கியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற் றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு நடந்தது.