உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.


வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 12ல் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று கோலாகலமாக துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தார். இத் தேரினை கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சினேகப்பிரியா, டி.ஆர்.ஓ.,ராஜகுமார் ஆகியோர் வடம்பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்களும் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சபரிஐங்கரன், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, துணைத்தலைவர் சாந்தகுமார், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், தாசில்தார் சதீஷ்குமார், வீரபாண்டி தி.மு.க., செயலாளர் செல்வராஜ், கே.எம்.சி., குழும தலைவர் முத்துகோவிந்தன், கணபதி சில்க்ஸ் பாலசுப்பிரமணியன், அரசு ஒப்பந்ததாரர் பாண்டியராஜன், லைப் இன்னோவேசன் பள்ளி தாளார் நாராயணபிரபு, லோகநாதன், இன்ஜினியர் அஸ்வத், பிரகாஷ் ப்ளு மெட்டல் வசந்த், அவதார் கெமிக்கல்ஸ் சதிஷ்ராஜா கருப்பையா, தனலட்சுமி முத்தையா மஹால் சின்னன், சக்தி, கிளாசிக் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை கோயில் நிர்வாக அலுவலர் சுபிதா தலைமையில் மேலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !