உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களுக்கு மோட்ச தீபம்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களுக்கு மோட்ச தீபம்

தொண்டாமுத்தூர்: பேரூர் படித்துறையில், இந்து மக்கள் கட்சி சார்பில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களுக்கு, 20ம் ஆண்டு மோட்ச தீபம் அளிக்கப்பட்டது. இலங்கை நாட்டில் உள்ள முள்ளிவாய்க்காலில், கடந்த, 2006ம் ஆண்டு மே 17ம் தேதி நடந்த போரில், ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் நடந்து 20 ஆண்டுகளான நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களுக்கு, 20ம் ஆண்டு மோட்ச தீபமேற்றும் நிகழ்ச்சி, பேரூர் படித்துறையில் நேற்று நடந்தது. இதில், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளர் சூர்யா தலைமையில், கட்சி நிர்வாகிகள், திதி கொடுத்து மோட்ச தீபமேற்றி வழிபட்டனர். இதில், ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !