அலங்காநல்லுார் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2 days ago
அலங்காநல்லுார்: பி.மேட்டுப்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 28ல் கணபதி ஹோமத்துடன் முதல்கால யாக பூஜைகள் துவங்கின. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து கடங்கள் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முத்தாலம்மன், காளியம்மன் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மரியாதைக்காரர்கள், திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.