உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்மணி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பொன்மணி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே வடக்கு காவனூரில் பொன்மணி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


சாலைக்கிராமம் அருகே உள்ள வடக்கு காவனூரில் பொன்மணி விநாயகர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த மாதம் பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று மாலை முதல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை பூர்ணாகுதி முடிவு பெற்றவுடன் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோபுர கலசத்திற்கு கொண்டு சென்றனர்.பின்னர் வானில் ஏராளமான கருடன்கள் வட்டமிட புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு அன்னதானம் நடந்தது. விழாவில் சாலைக்கிராமம், வடக்கு காவனூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !