சாயல்குடி ஜக்கம்மாள் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :3 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூரில் ஜக்கம்மாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இன்று காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை கன்னிமூல கணபதி ஜக்கம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. குடத்தில் புனித நீர் வைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வீர ஜக்கம்மாள் அறக்கட்டளை தலைவர் சுந்தர கணபதி, அறக்கட்டளைச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நரிப்பையூர் குப்பா வீட்டு பங்காளிகள் செய்திருந்தனர்.