உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்கதிர்பூர் பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

கீழ்கதிர்பூர் பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

 கீழ்கதிர்பூர்: கீழ்கதிர்பூர் பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம தேவதை பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஜலம் திரட்டலும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தனர். தொடர்ந்து பக்தி பாடல் நடன நிகழ்ச்சியும், பொன்னியம்மன் வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !