உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்

மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம்: மாயூரநாத சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி நேற்று காலை அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. ஜூன் 26-ல் திருக்கல்யாணம், ஜூன் 28-ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !