மகிழ்ச்சியாக வாழ வழி சொல்கிறார் ஆதிசங்கரர்
* கிடைத்ததை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
* நல்ல செயல்களை செய்தால் நல்லது நடக்கும்.
* கடவுளிடம் சரண் அடைவதே உயர்ந்த விஷயம்.
* பொதுநலத்துடன் இருப்பதே கடவுளை அடையும் வழி.
* கடவுளின் திருவடி மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.
* மூச்சுள்ள வரை உன்னை நினைக்க வேண்டும் என கடவுளிடம் வரம் கேள்.
* ஒளி இருந்தால் உலகத்தை பார்க்கலாம். ஞானம் இருந்தால் கடவுளை பார்க்கலாம்.
* சமையல் செய்ய நெருப்பு தேவை. மோட்சம் பெற ஞானம் தேவை.
* ஐம்புலன்களை கட்டுப்படுத்தினால் மனம் கட்டுப்படும்.
* எல்லாம் நானே, அனைத்தும் எனது பொருள் என நினைத்தால் துன்பப்படுவாய்.
* பயனில்லாத ஒரு சொல்லைக் கூட சொல்லாதே.
* கஞ்சனாக இருக்காதே. மீறினால் உன்னிடம் உள்ள நல்ல குணம் அழியும்.
* வறுமையும், செல்வமும் விருந்தினர் போல தற்காலிகமானது.
* தீய ஆசைகளை ஒழிக்க நல்லவர்களிடம் நட்பு கொள்.
* எப்போதும் சந்தோஷமாக இருப்பவனே உயர்ந்த மனிதன்.
* உழைப்பால் கிடைத்த செல்வமே மதிப்பு மிக்கது.