விருதுநகர் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா ஜூலை 10ல் மாலை 6:00 மணிக்கு மகா ஸ்ங்கல்ப்பத்துடன் துவங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை துவக்கம், புனித நீர் கொணர்தல், புண்யாஹ வாசனம் நடக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இன்று மாலை 4:30 மணிக்கு நடந்த திருக்கல்யாணத்திற்காக பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். இரவு 8:00 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேய பக்த ஜனசபை அறக்கட்டளை தலைவர் முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், செயலாளர் நாகராஜன், துணைச்செயலாளர் ரவீந்திர ராஜா, பொருளாளர் சங்கர பாண்டியன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராம்தாஸ், ராஜேஷ் குமார், சண்முகசுந்தரம், வேல்சாமி, விரிஜிலால்பாபு, முனியப்பன், முத்துராமன், சேதுராமன், செல்வம், வேல்முருகன், ராம்குமார், ரெங்கராஜன், மோகன், பலராமன், பாலாஜி பக்தர்கள் குழுவினர் செய்தனர்.
இதில் எம்.எல்.ஏ., செல்வம், அருப்புக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பாராஜ், மஹாராஜா கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் ரமேஷ் குமார், தேவர் மகாஜன சங்க செயலாளர் ரத்தினகுமார், தனசக்தி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சக்திவேல், அனுமான் ஆயில் உரிமையாளர் தங்கராஜன், அனுமான் மருத்துவமனை டாக்டர் சுனில், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், காவ்யா ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராஜ்குமார், ஸ்ரீ விஜயலட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் வரதராஜன், லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் கண்ணன், ஸ்ரீ வித்யா கல்விக்குழுமங்கள் தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ், குமரேசன் அண்ட் கோ உரிமையாளர் குமரசேன் உள்பட பலர் பங்கேற்றனர்.