அமர்நாத் பாதயாத்திரை குழு இன்று தேவகோட்டை வருகை
ADDED :4720 days ago
தேவகோட்டை: ஒருமைப்பாட்டை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து அமர்நாத்திற்கு சிவகாசி பழனிச்சாமி தலைமையில் 19 பேர் பாதயாத்திரை செல்கின்றனர். ஜன.11 ந்தேதி கன்னியாகுமரியில் புறப்பட்ட யாத்திரை குழுவினர், நேற்று முன்தினம் உப்பூர் வந்தனர். நேற்று காலை வெய்யுலகந்த விநாயகரை தரிசித்து பயணத்தை தொடர்ந்தனர். நேற்று மாலை புளியாலில் கிராமத்தினர் வரவேற்பு கொடுத்தனர். பிரகத்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயிலில் தங்கினர். இக் குழுவினர் இன்று (ஜன.29)அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு தேவகோட்டை வருகின்றனர்.