சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோவிலில் உண்டியல் திறப்பு
ADDED :24 minutes ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் உண்டியல் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் நேற்று திறக்கப்பட்டு என்னப்பட்டது. தற்காலிக உண்டியலில் ரூ.4,47,000, நிரந்தர உண்டியலில் 13,00963 ரூபாய் இருந்தது. மேலும் 30 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளியும் இருந்தது. இப்பணியில் இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையர் திவ்யபாரதி, ஆய்வாளர் சுகன்யா, சூப்பிரண்டு ஜெய்கணேஷ், தேவஸ்தான பணியாளர்கள் எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.