உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகுனியைப் பற்றிய புதுத்தகவல்!

சகுனியைப் பற்றிய புதுத்தகவல்!

வேதத்தை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரிப்பர். அதர்வண வேதத்திற்கு அதர்வம், பிரும்மவேதம், ஆங்கிரஸ வேதம் என்றும் பெயருண்டு. தருவ என்பதற்கு பயம் என்று பொருள். அதர்வ என்றால் பயமற்ற என அர்த்தம். பயத்தைப் போக்கும் வேதம் என்பதால், அதர்வம் என்ற பெயர் ஏற்பட்டது. அக்காலத்தில் அதர்வணவேதம் அறிந்தவரை மன்னர்கள் உதவிக்காக தன்னுடன் வைத்திருப்பது வழக்கம். மகாபாரதத்தில் துரியோதனன் சகுனியிடம் ஆலோசனை செய்யாமல் எச்செயலும் செய்வதில்லை என்ற நிலையிருந்தது. இதற்குக் காரணம் சகுனி அதர்வணவேத பண்டிதனாகத் திகழ்ந்தான். இவ்வேதத்திற்குரிய கருநீல வண்ண ஆடையையே எப்போதும் உடுத்துவான். மாயாஜால வித்தைகள், ஏவல் தந்திர மந்திர முறைகள் இவ்வேதத்தில் அதிகம் இருந்ததால், காலப்போக்கில் இதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது. வேதங்களுக்கு உருவம் உண்டு. அதர்வண வேதமூர்த்தி குரங்கு முகத்துடனும், அவரது தேவி வராக முகத்துடனும் காட்சியளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !