உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத பழமொழிகள்...

ஆடி மாத பழமொழிகள்...

ஆடிப் பட்டம் தேடி விதை


விவசாயிகள் விதைப்பதன் ஆடி மூலம் மாதத்தில் பயிர்கள் செழித்து நல்ல மகசூல் தரும் என் பதை இது குறிக்கிறது.


ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்


ஆடி மாதத்தில் வீசும் பலத்த சூறா வளிக் காற்றின் தீவிரத்தை விளக்குவ தற்காக இப்பழமொழி உருவானது.

ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்


ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று, பருவமழைக்கான அறிகுறியா கும். இது சரியாக நிகழ்ந்தால் ஐப்பசி மாதத்தில் நல்ல மழை பெய்யும்.

ஆடிக் கூழ் அமிர்தமாகும்


ஆடி மாதக் கோடை வெப் பத்தைத் தணிக்க, கிராமங்களில் கம்பு, ராகி போன்ற தானியங்க ளால் செய்யப்படும் கூழ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  

ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசி குளி


கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் ஆடி மாதத் தில், பெண்கள் செவ்வாய்க்கிழ மைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளிப்பது உடல் ஆரோக்கியத்தையும் துாய்மையையும் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !