உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா

மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நடந்த திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஜூலை 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வீர அழகர் யானை வாகனத்தில் அலங்காரங்களுடன் சவுந்தரவல்லித் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகளை அர்ச்சகர்கள் செய்த பின்னர் வீர அழகரிடம் இருந்து பெறப்பட்ட திருமாங்கல்யத்தை சவுந்தரவல்லி தாயாருக்கு அணிவித்தனர். சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடந்தது.

திருக்கல்யாண விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று வீர அழகர் சுந்தரபுரம் கடை வீதி மண்டகப்படிக்கு பல்லக்கில் எழுந்தருளினார். தீர்த்தவாரி ஜூலை 30ம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !