வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
ADDED :22 hours ago
புதுச்சேரி: வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
வில்லியனுாரில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பூர திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டும் ஆடிப்பூர திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை யொட்டி, அம்மனுக்கு தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் அம்மன் உள்புறப்பாடும் நடந்து வருகிறது. திருவிழாவின் நான்காம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆண்டாள் திருமஞ்சனம், உள்புறப்பாட்டில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள் செய்திந்தனர்.