சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
திருவள்ளூர்; சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் திருக்கல்யாண மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அருகே, சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், 14ம் ஆண்டு, வள்ளி -– முருகன் திருக்கல் யாண மகோத்சவம் நேற்று நடந்தது. இதில், திருமண வரம் வேண்டி, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை 9:00 மணிக்கு வள்ளி – மணவாள பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, திருக்கல்யாண மகோத்சவம் விமரிசையாக நடந்தது. திருகயிலாய வாத்தியங்கள் முழங்க, மணக்கோலத்தில், வள்ளி -– மணவாள பெருமான் உள்புறப்பாடு நடந்தது. பிரசாதமாக பெற்ற மாலையை அணிந்த பிரார்த்தனையாளர்கள், சுவாமியை பின்தொடர்ந்து, ஆறு முறை கோவிலை வலம் வந்தனர். கோவிலின் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம் மேற்பார்வையில், தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையிலான அர்ச்சகர்கள், திருமண வைபவத்தை நடத்தினர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன