தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஆண்டாள் கோயில்
108 திவ்ய தேசங்களில் மங்கள சாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவ திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில்.
ஆண்டாளின் திருப்பாவை இல்லாமல் எந்த ஒரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது. எல்லாவற்றிற்கும் ஆண்டாள் முதன்மை பெற்று, பெருமாளுக்கு இணையான அந்தஸ்து பெற்று இருப்பதும், தேரோட்டத்தில் ரெங்கமன்னாருடன் பவனி வருவது காண முடியாத வைபவம்.
2000ல் நடந்த கோயில் மகா கும்பாபிஷேகத்தை அதன் கமிட்டி தலைவராக இருந்த எனது தந்தை ராமசுப்பிரமணிய ராஜா நடத்தி முடித்தார். 2015ல் வடபத்ர சயனர் கோயில் கும்பாபிஷேகம், நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலமாக பக்தர்களின் நன்கொடையால் தங்க விமானம் செய்து அதை 2016ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறச் செய்தார்.
எங்களது ராம்கோ சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோயிலுக்கும், திருத்தேருக்கும், யானை ஜெயமால்யதாவிற்கும், பக்தர்களுக்கும் பல்வேறு நலப்பணிகள் செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு ஆண்டாள் தாயார் வழங்கியதை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
சிறப்பு மிக்க ஆடிப்பூரத் திருவிழாவில் பக்த கோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று ஆண்டாள் திருவருள் பெற்று வாழ்வில் எல்லா வளமும் பெருக.
பிரார்த்தனைகள் நிறைவேறும்
அப்போது அவள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது. கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள். அதேபோல, ஆண்டாள் பிறந்தவீட்டிற்கு செல்லும் நாளில் அவளை வழிபட அனைத்து நியாயமான பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பர்.
மாதவிப்பந்தல்
ஆண்டாள் சன்னதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. பெரியாழ்வாரிடம் வளர்ந்த ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாளாம். இப்பந்தல் கேரள பாணியில் முழுவதும் மரங்களால் செய்யப்பட்டதாகும்.