உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா ஐந்து நாட்கள் நடக்கிறது.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் ஸ்ரீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் பரமசுவாமி வைகை ஆற்றின் கரையில் வடக்கு திசை நோக்கி அருள் பாலிக் கிறார். இங்கு ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோவிலை போன்று அனைத்து விழாக்களும் நடக்கிறது.

இதன்படி ஒவ்வொரு விழாக்களிலும் ஏற்படும் ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரிகார உற்சவமாக பவித்ர உற்ஸவம் நடத்தப்படுகிறது.

நேற்று முன்தினம் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளினார். அப்போது அனைத்து சுவாமிகளுக்கும் பவித்ர மாலை அணிவிக்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ஐந்து நாட்கள் விழா நடக்கும் நிலையில் இறுதி நாளில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருவார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !