பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
ADDED :2 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அதனையொட்டி, உற்சவர் பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திவ்ய அலங்காரத்திற்குப்பின், சுவாமி மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, சேவை, சாற்றுமுறை, அலங்கார தீபங்களுடன் பூஜை நடந்தது.
தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.