உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபானந்த வாரியார் 121வது பிறந்தநாள் விழா

கிருபானந்த வாரியார் 121வது பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட தென்னிந்திய மகாஜன சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் அங்கமுத்து, பொருளாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் கருணாகரன் வரவேற்றார், செயலாளர் அரவிந்தன், பொருளாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில், கிருபானந்த வாரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !