உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னழகி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னழகி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை: திருவாடானை அருகே அழகமடை கிராமத்தில் அமைந்துள்ள பொன்னழகி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.


திருவாடானை அருகே அழகமடையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னழகு முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கிராமத்தார் சார்பில் முற்றிலும் கற்களால் புதுப்பிக்கப்பட்டது. கோபுரம் மற்றும் பிரகாரங்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு முன்னதாக கோயில் முன்பு யாகசாலை அமைக்கபட்டு பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், திருவாடானை ஆதிரெத்தினம் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10:15 மணிக்கு கருடபகவான் வானில் வட்டமிட விநாயகர், முருகன், முனீஸ்வரர் போன்ற பரிவார மூர்த்திகளுடன் பொன்னழகி முத்து மாரியம்மன் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அழகமடை கிராமத்தினர் மற்றும் பகத்சிங் நற்பணி மன்றத்தினர் விமரிசையாக செய்திருந்தனர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திருவாடானை ராஜா பேன்சி உரிமையாளர் பாரதிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !