தூங்காமல் தூங்குபவர்!
ADDED :5023 days ago
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் ஆழ்ந்த உறக்கம் அவசியம். ஆனால், சித்தர்களில் ஒருவரான பத்திரகிரியார், தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? என்று இறைவனிடம் வேண்டுகிறார். இந்த தூக்கத்தை யோகநித்திரை என்பர். சிவாம்சங்களில் ஒருவரான தட்சிணாமூர்த்தியும், ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாதரும் யோகநித்திரையிலேயே கண் மூடி இருக்கின்றனர். அனைத்தும் அறிந்த இந்நிலையை அறிதுயில் என்றும் சொல்வதுண்டு.