உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!

ஒருவன் உயர்நிலையை அடைய விரும்பினால் அடக்கமுடையவனாக இருக்க வேண்டும். கர்வியாக இருப்பது கேவலமான தாழ்ந்த சுபாவம். பறவைகள் உயரப் பறந்தாலும் அது கீழே தான் கூடுகட்டும். பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். மழைநீர் மேடான நிலங்களிலிருந்து ஓடி தாழ்ந்த இடத்தில் தேங்கி நிற்கிறது. நீ பெருமை அடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் பணிவோடும் இரு. மற்றவர்கள் தலை வணங்கினால் அடிபணிந்து வணங்குவது நமது கடமை.

சிந்தனைகள் திசைமாறும் போது கைகளினால் தாளம் போட்டுக் கொண்டே இனிமையான ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யுங்கள். இவ்வாறு செய்து
கொண்டிருந்தால் மனதிலுள்ள தீய சிந்தனைகள் எல்லாம் அகன்று ஓடும். நம்முடைய மனப்பாங்கையும் கொள்கைகளையும், கடமையையும் சரிவரப் பின்பற்றி, அடுத்தவர்கள் விமர்சிப்பார்களோ என கலங்காமல், கடமையைச் செய்தால் வெற்றி நிச்சயம்.

கனமான தராசுத்தட்டு கீழே போகிறது. லேசான தட்டோ மேலே செல்கிறது. அதுபோல உயர் குணமும், சாமர்த்தியமும் உள்ள மனிதன் எப்போதும் பணிவாகவே இருக்கிறான். முட்டாளோ வீண் அகம்பாவத்தால் கர்வம் படைத்தவனாக இருக்கிறான். காற்றில் பறந்தோடும் காய்ந்த சருகு போல நீ கர்வம் இல்லாதவனாக இரு.

ஊசியில் நூலைக் கோர்க்க வேண்டுமானால், நீட்டிக் கொண்டிருக்கும் பஞ்சு முனையை எடுத்தெறிந்து, நூல்முனையை கூர்மையாக்க வேண்டும். இப்படி செய்தால் தான், நூல் எளிதாக நுழையும். அதுபோல இறைவனிடம் உனது மனதையும், இதயத்தையும் ஒருமிக்க செய்ய வேண்டுமானால்,அடக்கத்தோடும் பணிவோடும், கர்வமில்லாதவனாயும் இரு. கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார். ஆனால், நீ அவரைத் தேடி எங்கெல்லாமோ
அலைகிறாய். இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாகத் தான் கடவுளைத் தேடுவதும் இருக்கிறது. உள்ளத்தில் இருப்பதை உதடு பேச வேண்டும்.

அவனே மனிதன். இவர்களைப் போன்றவர்களின் உள்ளத்திலேயே இறைவன் குடியிருக்கிறான். -சொல்கிறார் ராமகிருஷ்ணர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !