உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்: உலகறிய செய்த பிரதமர் மோடி: மக்கள் புகழாரம்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்: உலகறிய செய்த பிரதமர் மோடி: மக்கள் புகழாரம்

ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் புகைப்பட பின்புறத்தில் பிரிக்ஸ் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று, ராமேஸ்வரம் கோயில் பெருமையை உலகறிய செய்துள்ளார் என மக்கள் புகழாரம் சூட்டினர்.

நேற்று டில்லியில் துவங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடு தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், 11 நாடு தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்ற இடத்தின் பின்புறத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரசித்த பெற்ற 3ம் பிரகாரம் புகைப்படம் இருந்தது. இது இந்தியா மட்டுமின்றி உலக நாடு மக்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் ராமேஸ்வரம் கோயிலின் பெருமையை பிரதமர் மோடி உலகறிய செய்து பெருமை சேர்த்துள்ளார் என மக்கள் புகழாரம் கூறினர்.

3ம் பிரகாரம் வரலாறு :


11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் கோயிலின் 3ம் பிரகாரம் கட்டுமானம் 1740ல் ராமநாதபுரம் விஜயரகுநாத சேதுபதி மன்னர் துவக்கினார். இந்த பிரகாரம் 1212 தூண்கள், கிழக்கு- மேற்கு 690 அடி, வடக்கு-தெற்கு 435 அடி நீளம், 22.5 அடி உயரம் கொண்டது. இதன் தூண்கள் ஒரே நேர்கோட்டில் நீளமாக அமைந்துள்ளதால், இதுபோன்ற கோயில் பிரகாரம் உலகில் வேறு எங்கும் இல்லை. 30 ஆண்டுகளாக கட்டுமானம் நடந்து 1770ல் முடிவடைந்தது.

இதுகுறித்து ராமேஸ்வரம் கம்பன் கழகம் பொருளாளர் ராமு கூறுகையில் :

உலகிலே மிகப் பிரசித்த பெற்றது ராமேஸ்வரம் கோயில் 3ம் பிரகாரம் தான். பிரகார தூண்கள் மேலே கலைநயத்துடன் சிற்பங்கள் அமைத்துள்ளனர். 286 ஆண்டுகளாக கம்பீரமாக ஆன்மிக கலாச்சாரத்துடன் காட்சியளிக்கும் 3ம் பிரகாரத்தின் புகைப்படத்தை பிரிக்ஸ் தலைவர்களை வரவேற்ற இடத்தில் வைத்து பிரதமர் மோடி பெருமையை பிரதமர் மோடி சேர்த்துள்ளார். மேலும் ரஷ்ய அதிபருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்து, தமிழர்களின் பெருமையை உலகிற்கே எடுத்துரைத்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !