மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் 13,000 பேர் முன்பதிவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 ல் நடக்கிறது. இதை கோயில் மேல்தளத்திலிருந்து காண வி.வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் பேருக்கு 7 வகைகளில் பாஸ் வழங்கப்படுகிறது. 2 ஆயிரம் பேர் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவர்.
இதற்காக madurai meenakshi.hrce.tn.gov.in இணையதளம் வழியாக நேற்று இரவு 9:00 மணிக்குள் முன்பதிவு செய்யலாம். ஒருவர் அதிகபட்சம் 2 பாஸ் பெற விண்ணப்பிக்கலாம். கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். செப்., 14 மாலை 6:00 மணிக்குள் அதை காண்பித்து மதுரை எல்லீஸ்நகர் பக்தர்கள் தங்கும் விடுதியிலுள்ள யாத்ரி நிவாஸ் அலுவலகத்தில் பாஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இணையத்தில்13 ஆயிரத்து 228 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கணினி குலுக்கல் முறையில் 2000 பேர் தேர்வு செய்யப்படுவர்.