உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்காக கைவினைஞரின் 2 செ.மீ., குழலுாதும் சந்தன மர கணபதி

விநாயகர் சதுர்த்திக்காக கைவினைஞரின் 2 செ.மீ., குழலுாதும் சந்தன மர கணபதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சந்தன மரத்தில், 2 செ.மீ., உயரத்தில் குழலுாதும் விநாயகர் சிலையை, திருமழிசையை சேர்ந்த சிற்பக்கலைஞர் உருவாக்கி உள்ளார்.

சென்னை, திருமழிசையை சேர்ந்தவர் பரணி; தேசிய விருது பெற்ற நுண்சிற்பக் கலைஞர். ஒரே ஒரு அரிசியில் நுண்சிற்பங்களை செதுக்கி வரும் இவர், சந்தன மரத்தில், 10 மி.மீ., உயரம் முதல் 1 அடி உயரம் வரையுள்ள சிற்பங்களை உருவாக்கி உள்ளார்.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் குழலுாதும் ஸ்ரீகணபதி சிலை உருவாக்கி உள்ளார். கற்பக விருட்சத்தில் கணபதி அமர்ந்து குழலுாதுவது போல சிலை தத்ரூபமாக அமைந்துள்ளது.

ஸ்ரீகணபதி சிலையின் உயரம், 2 செ.மீ., மட்டுமே. விநாயகரின் வாகனமான எலிகள், நான்கு இடம் பெற்றுள்ளன. அவை தம்புரா, வயலின், ஜால்ரா, மத்தளம் வாசிப்பது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீகணபதி, எலிகள், கற்பக விருட்சம் ஆகியவை இணைந்த இந்த சிலை, 9.52 செ.மீ., உயரமும், 4.44 செ.மீ., அகலமுகம் கொண்டது. எலி சிலையின் உயரம் 0.5 செ.மீ., மட்டுமே. இச்சிலையை வடிமைக்க 20 நாட்கள் ஆனதாக, சிற்பக் கலைஞர் பரணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !