உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


 நெல்லிக்குப்பம் சோழவல்லி இ.ஐ.டி.பாரி குடியிருப்பு வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 12 ம் தேதி கணபதி ஹோமம்,முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும்,பூர்ணாஹீதி தீபாராதனை முடிந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.ஆலை பொது மேலாளர் மணிகண்ட வெங்கடேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இரவு விநாயகர் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !