எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை
ADDED :1 days ago
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.
எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதம் வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் சேவை நடக்கிறது.
இதன்படி செப்.,11ல் இரவு ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் ஊஞ்சலில் அமர்ந்தனர். தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.