உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. சேவூரில் நடுசிதம்பரம் என போற்றப்படுவதும், பழமை வாய்ந்ததுமாக சிறப்பு பெற்ற சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் உள்ளது.


இக்கோவிலில் கடந்த 2024ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று காலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் கலச பூஜை, 108 சங்காபிஷேகம்,ராஜமா தாங்கி யாகம், கோமாதா பூஜை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது.

பின்னர் சுவாமிகளுக்கு கலசாபிஷேகம்,சிறப்பு அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !