உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலில் வார்ஷீக மஹோத்ஸவம் தொடக்கம்

துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலில் வார்ஷீக மஹோத்ஸவம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் துாப்புல் வேதாந்த தேசிகரின், 758வது புரட்டாசி திருவோண நட்சத் திர வார்ஷீக மஹோத்ஸவம் நேற்று தொடங்கியது.

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 758வது புரட்டாசி திருவோண நட்சத்திர வார்ஷீக மஹோத்ஸவம், நேற்று காலை தொடங்கியது.

தொடர்ந்து, 11 நாட்கள் நடக்கும் உத்சவத்தில், தினமும் காலை தங்க பல்லக்கில், வெவ்வேறு அலங்காரத்திலும், மாலை பல்வேறு வாகனங்களிலும், துாப்புல் வேதாந்த தேசிகர் வீதியுலா வருவார்.

அதன்படி, முதல் நாளான நேற்று காலை தங்கப்பல்லக்கிலும், இரவு சப்பரத்திலும் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

இரண்டாம் நாளான இன்று காலை தங்க பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையிலும், மூன்றாம் நாள் உத்சவமான நாளை காலை தங்கப்பல்லக்கில் முரளி கிருஷ்ணன் அலங்காரத்திலும், இரவு சந்திர பிரபையிலும் உலா வருகிறார்.

ஏழாம் நாள் உத்சவமான, வரும் 19ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு, ராமர் திருக்கோலத்தில் வேதாந்த தேசிகர் அருள்பாலிக்கிறார்.

செப்., 23ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தம், தீப பிரகாசருக்கு விமான உத்சவத் துடன், துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !