உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பூர் விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

உப்பூர் விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைய பெற்றுள்ளதால், இக்கோயில் விநாயகர், வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் சதுர்த்தி திருவிழா செப்.5 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக எட்டாம் நாளான செப்.12 ல் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்று மறுநாள் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி இன்று காலை 10:45 மணிக்கு நடந்தது. முன்னதாக, விநாயகருடன் பக்தர்கள் 2 கி.மீ., தொலைவில் உள்ள மோர்ப்பண்ணை கடலில் புனித நீராடி, அங்கிருந்து ஊர்வலமாக கோயிலை வந்து அடைந்தனர். பின்னர், கோயில் முன்பு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். காளை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !