கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :18 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பிரிதிவிமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
திருவிழா கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அய்யனார் சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டு துவங்கியது. தொடர்ந்து, சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சுவாமி வீதியுலா, திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கழுமரம் ஏறுதல், 10:30 மணிக்கு அக்னி மிதித்தல், பகல் 12:00 மணிக்கு காளி கோட்டை இடித்தல் நடந்தது. மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.