உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவம் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவம் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை கோயிலில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு விசேஷ திருமஞ்சன பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் கொடி பட்டம் மாட வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, காலை 10:45 மணிக்கு சதீஷ் பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலெக்டர் சரண்யா அரி, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதியுலா நடக்கிறது. செப்.23 காலை 7:05 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !