ஸ்ரீ ரவிசங்கர் சமயபுரத்தில் சுவாமி தரிசனம்
ADDED :1 days ago
திருச்சி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ளார். திருச்சி, திருவெள்ளறை பெருமாள் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று, அவர் தரிசனம் செய்தார்.
சமயபுரம் கோவிலுக்கு வந்த அவருக்கு, கோவில் குருக்கள் வரவேற்பு அளித்தனர். அதன் பின், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் கூறியதாவது:
திருவெள்ளறை பெருமாள் கோவிலில், கோபுரம் கட்டும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு, ராமேஸ்வரம் கோவில் வழக்கப்படி, வரவேற்பு அளித்தது சிறப்பானது. நம் நாட்டிற்கு வந்த விருந்தினருக்கு திருக்குறள் புத்தகம் பரிசளிப்பது இதுவே முதல்முறை. அதை, பிரதமர் மோடி செய்துள்ளார். நம் பண்பாடு, கலாசாரம் மிகவும் சிறந்தது. அது அனைவருக்கும் தெரிய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.