உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிருந்தீஸ்வரர் கோயில் யாகசாலை பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு

திருவிருந்தீஸ்வரர் கோயில் யாகசாலை பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ராதானூர் திரு விருந்தீஸ்வரர் கோயில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற யாக சாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே, ராதானூர் சௌந்தரநயகி அம்பாள் சமேத திருவிருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் காலை 8:30 மணிக்கு நடக்கிறது. விழாவை முன்னிட்டு, செப்.15 ல் அனுக்கை, கணபதி ஹோமம், தன பூஜை வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று, முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை நடைபெற்று, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகசால பூஜை, விமான கலச ஸ்தாபிதம் நடைபெற்று, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில் விழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை 7:00 மணிக்கு நான்காம் காலையாக சாலை பூஜைகளும், நாடி சந்தானம், மகாபூர்ணகுதி தீப ஆராதனை நடைபெற்று, காலை 8:30 முதல் 10: 00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராஜவளநாடு ராதானூர் கிராம பொதுமக்கள் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !